இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, March 3rd, 2022

இன்றைய தினமும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று (03) காலை 08 மணிமுதல் மாலை 06 மணிவரை 05 மணித்தியாலங்களும் மாலை 06 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று (02) தெரிவித்திருந்தார்.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் அதரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: