இன்றும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சதியப்பிரமாணம்!

Friday, March 4th, 2022

இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேபோன்று சி.பி. ரத்நாயக்க – வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராகவும் திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சராகவும் விமலவீர திஸாநாயக்க – அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் அருந்திக பெர்னாண்டோ – தென்னை, கித்துல் மற்றும் பனை உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் அதனுடன் இணைந்த கைத்தொழில் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமைச்சர் பொறுப்பில் இருந்து விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நீக்கப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ், நாட்டின் ஜனாதிபதியாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் – கைத்தொழில் அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து திரு. விமல் வீரவங்சவும் எரிசக்தி அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து திரு. உதய கம்மன்பிலவும் நேற்று, மார்ச் 3ஆம் திகதி, பிற்பகல் நீக்கப்பட்டுடிருந்தனர்.

இதையஇதேவேளை நேற்றையதினம் போக்குவரத்து அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோன்று புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்கவும், எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகேயும்  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: