இன்றுமுதல் 51 ஆயிரம் பட்டதாரிகள் நிரந்தர அரச ஊழியர்களாக நியமனம்!

Monday, January 3rd, 2022

வேலையற்ற பட்டதாரிகள் 51 ஆயிரம் பேருக்கு இன்றுமுதல் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பயிற்சியில் இருக்கும் 51 ஆயிரம் பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோ கத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதுடன், அவர்களில் ஒரு வருட பயிற்சியைப் பூர்த்தி செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழுவினருக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: