இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபை!

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் திரும்புவதற்கு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனடிப்படையில் பயணிகளின் வசதி கருதி அதிவேக வீதியில் 100 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தயுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிவேக வீதியூடாக பெரும்பாலான பயணிகள் பயணிப்பதால், மேலதிகமாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபையின் பிரதம செயல்பாட்டு அதிகாரி W.M.A.S.B. வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொது போக்குவரத்தில் பயணிக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் மீள தலைநகருக்கு திரும்புவதற்காக 4,000 பேருந்துகளை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதுடன் இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றுமுதல் தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அலுவலக புகையிரத சேவைகள் வார இறுதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அனைத்து புகையிரத சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளதாகவும் புகையிரத பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|