இன்றுமுதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிப்பு!

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு இன்றுமுதல் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாயவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நல்லாட்சியில் நியமனம் வழங்கப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேரை நிரந்தர சேவையில் இணைக்க இன்றுமுதல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றினால் அவர்களை அரச சேவைக்கு இணைக்கும் பணி தாமதமான நிலையில் அவர்களின் ஆவணங்களை பெற்று நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மாவட்ட செயலாளர் அலுவலக மட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்படும் எனவும் அவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|