இன்றுமுதல் முழுமையாக நீக்கப்படுகின்றது ஊரடங்கச் சட்டம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Sunday, June 28th, 2020

கொரோனா தொற்றை கட்டப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்றுமுதல் அமுலாகும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மக்கள் தமது தேவைகள் நிறைவுசெய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 11 ஆம் திகதிமுதல் நாடுமுழுவதும் ஊரடங்கு பகல் நேரத்தில் தளர்த்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.

பின்னர் கடந்த 13 ஆம் திகதிமுதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது

இந்நிலையில் இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: