இன்றுமுதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Saturday, July 1st, 2017

நூற்றுக்கு 6.28 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்துக் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதற்கமைய, ஆகக் குறைந்த கட்டணமாக இருந்த 9 ரூபா கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, இந்த கட்டண திருத்தங்களுக்கு அமைய அதிவேக வீதியின் பேரூந்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன

இதற்கமைய, மஹரகம காலிக்கான கட்டணம் 410 ரூபாவாகவும், மஹரகம மாத்தறைக்கான கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்படும்.கடுவெல – மாத்தறைக்கான கட்டணம் 520 ரூபாவாகவும், கடவத்த – மாத்தறைக்கான கட்டணம் 540 ரூபாவாகவும் கடவத்த- காலிக்கான கட்டணம் 440 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.

மேலும், கொழும்பு மாத்தறை வரையான கட்டணம் 530 ரூபாவாகவும், கடுவெல – காலிக்கான கட்டணம் 430 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.

Related posts: