இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை – குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி அதாவது இன்று செவ்வாய்க்கிழமைமுதல் பெப்ரவரி 04ஆம் திகதிவரை தினசரி மின்வெட்டுக்கான அனுமதியை இலங்கை மின்சார சபையிடம் அந்தக் குழு கோரியுள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் நீண்டகால மின்வெட்டு தேவைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் பல 3,000 மெகாவாட் ஜெனரேட்டர்களை வைத்துள்ளன என்றும் இந்த ஜெனரேட்டர்கள் நாட்டில் மின்சார உற்பத்திக்கு உதவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய ஜெனரேட்டர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறிய அவர், மின்சார நெருக்கடியை சரிசெய்ய தனியார் நிறுவனங்கள் தங்கள் உதவியை வழங்க ஒப்புக்கொண்டமை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமையால் நீண்டகால மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 2016 ஆம் ஆண்டுடே இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என தமது ஆணைக்குழு எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|