இன்றுமுதல் பிரதான ரயில் பாதையில் 10 ரயில் சேவைகள் முன்னெடுப்பு – புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, June 25th, 2021

ரயில் போக்குவரத்து சேவை மாகாணத்துக்குள் மாத்திரம் இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு பிரதான ரயில் பாதையில் 4 ரயில்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சேவையின்போது பயணிகள் ரயிலில் நெருக்கமாக பயணம் செய்வதை இயலுமான அளவில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்’.

ரயில் போக்குவரத்து சேவை குறித்து ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

மேலும்  – இதேவேளை ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால்  பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை அவதானிக்க முடிந்தது. கடந்த மூன்று நாட்களும் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ரயில் சேவையில் சமூக இடைவெளியைப் பேணுவது சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது. இருந்தும் பயணிகள் நலனை கருத்திற்கொண்டு ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்றுமுதல் பிரதான ரயில் பாதையில் 10 ரயில் சேவைகளும், கரையோர ரயில் பாதையில் 5 ரயில் சேவைகளும், களனி வழி பாதையில் 5 ரயில் சேவைகளும், புத்தளம் வழி பாதையில் 4 ரயில் சேவைகளும் இடம்பெறும்.

ரயில் சேவையை பயன்படுத்தும் பொதுப் பயணிகள் தங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: