இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் இரகசிய பொலி அதிகாரி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, April 5th, 2021

மாறுவேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேருந்து சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகூடிய வாகன விபத்துக்களைப் பதிவுசெய்த காலப்பகுதியாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கொழும்பிலிருந்து புறப்படும்  நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேருந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்றுமுதல் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையிலீடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: