இன்றுமுதல் நான்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 4th, 2022

வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: