இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, February 8th, 2021

இன்றுமுதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்ம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, சீனி, தேயிலை தூள், பருப்பு உட்பட முக்கிய 27 பொருட்களுக்கு இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ள வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது;

Related posts:

தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
பிரச்சினைகளை தீர்ப்பதல்ல பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு - அமைச்சர் ட...
கடதாசி தட்டுப்பாடு - மின் கட்டண பட்டியலை வழங்குவதில் பாதிப்பு என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு ...