இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில்லை – மக்கள் அதிருப்தி!
Monday, May 4th, 2020நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் வழமைபோல் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றும் தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய தபாலக ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொறிமுறைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் கணிகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் சில தபாலகங்களில் இன்றும் வைத்தியசாலை மூலமாக விநியோகிக்கப்படும் மருந்து வகைகளை மட்டும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வினியோகிக்கும் நடவடிக்கை முன்னொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது மக்களுக்குரிய வேறு சேவைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
கொரோனாவின் உச்சக்கட்ட ஆபத்தில் யாழ்ப்பாணம் - வடக்கில் 44 பேருக்கு தொற்றுறுதி!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - வர்த்தமானி வெளியானது!
|
|