இன்றுமுதல் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்!

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மேலதிக வகுப்புகளை இன்றுமுதல் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
முதல் கட்டமாக சுகாதார நடைமுறைகளுக்கு அமைய ஆகக் கூடுதலாக 100 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 100 மாணவர்களை அனுமதிக்க முடியாத தனியார் வகுப்புக்களில் 50 சதவீத மாணவர்களின் எண்ணிக்கையானோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு மேலுதிக வகுப்புகளை நடத்தும் போது சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு பல ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|