இன்றுமுதல் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதி முறைகள்!
Monday, June 12th, 2017
கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களின் வாகனங்களுக்கான வீதி விதிகள் இன்றுமுதல் கடுமையாக செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக பொலிஸ் தலைமையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு, பொலிஸ் நடமாடும் சேவை, பொலிஸ் சீ.சீ.டீ.வி கமரா மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஊடாக இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விசேடமாக காலி வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான வீதி மற்றும் வாகனங்கள் கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருட்களின் விலையில் திடீர் மாற்றம்!
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...
அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுங்கள் - பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க் கட...
|
|