இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்!
Wednesday, November 1st, 2023இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்குச்சீட்டில் இந்த முறை ஒரே இடத்தில் மட்டும் புள்ளடி!
எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!
குருதிக்கு பெரும் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு வடக்கு இளைஞர், யுவதிகளிடம் விடுக்...
|
|