இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 1st, 2021

இன்று தொடக்கம் எதிர்வரும் 5ஆம் திகதிவரை நாட்டிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெதரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கருத்தில் கொண்டு இவ்விஷேட பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஏப்ரல் 4 ஆம் கொண்டாடப்படுகின்றது. இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவும் நினைவும் அன்றையதினம் நினைவு கூரப்படவுள்ளது.

இந்நிலையில் இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு படைத்தளபதிகளுக்கு குறிப்பிட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தேவையான பாதுகாப்புத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என பிரிகேடியர் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதான பாதுகாப்பு திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தும் அதேநேரம் இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்பதாக 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஹோட்டல்கள், தேவாலயங்களை இலக்குவைத்து மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்களின் போது 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இதன்பின் விஷேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: