இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !

Sunday, March 3rd, 2019

இலங்கை அணிக்கு பாகிஸ்தான் லாஹூர் நகர் கடாபி விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

பாக்கிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 03 வது நாளின்போது இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டு காவற்துறை 06 பேர் மற்றும் பொது மக்கள் 02 பேர் உயிரிழந்தனர்.