இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்!

Tuesday, October 8th, 2019

ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

Related posts: