இன்றிலிருந்து 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் – ஜனாதிபதி ஊடக பிரிவு!

Monday, April 6th, 2020

6ஆம் நாளாகிய இன்றைய தினம்முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக முதல் முறையான பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றுமுதல் 10 ஆம் திகதிவரை வீட்டிலிருந்து பணியாற்றும் மூன்றாவது வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.

அத்துடன், இந்த காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்படமாட்டாது என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: