இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

Friday, January 19th, 2024

மக்கள் மத்தியில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி, உடல்வலி, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்புளுவென்சா வைரஸானது ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் படி இன்புளுவென்சா வைரஸானது 25 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts: