இன்னும் ஒருமாதத்திற்குள் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் – மாகாண சபைகள் அமைச்சு!

Monday, January 30th, 2017

இன்னும் ஒரு மாத காலப் பகுதிக்குள் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பெப்ரல் அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தை தெரியப்படுத்துமாறு கோரியே பெப்ரல் அமைப்பு குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

இதேவேளை, மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, அன்றையதினம் இந்த விடயம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

srilanka-415x260

Related posts:

அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகர...
நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பா...