இனி 25 வயதிற்கு மேற்பட்டவர்களே முச்சக்கரவண்டி செலுத்தலாம்!

Saturday, November 19th, 2016

போக்குவரத்து சேவையை வழங்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயதெல்லை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட நேற்று தெரிவித்துள்ளார்.

25 வயதிற்கு கீழ்ப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளை, பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்க அனுமதிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த வயதிற்கு உட்பட்டவர்கள் பயணிகளுக்கான பாதுகாப்பை உரிய முறையில் வழங்கமாட்டார்கள் என சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு வருடம் தகுதிக்காண காலம் வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் கூறியுள்ளார். வயதெல்லை நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் குறித்த அதிகாரிகளுக்கு வீதி பாதுகாப்பு தேசிய சபை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வயதிற்கு கீழ்ப்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர்களினால் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனை தடுக்கும் நோக்கிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

Three-wheeler-720x480

Related posts: