இனி குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்.!

Sunday, September 18th, 2016

 

விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த செலவில் மின்சாரம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், விவசாய நடவடிக்கைகளின்போது நீர் விநியோகத்திற்கு இரவு 10 தொடக்கம் அதிகாலை 6 மணி வரை குறைந்த செலவில் மின்சாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டமானது எதிர்வரும் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதற்கட்ட செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

69b24fa9-5a7c-4625-892c-a5646ade588e

Related posts: