இனி அனைத்துமே சொந்த செலவுதான்!

Thursday, October 20th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய குழு உறுப்பினர்களுக்கு வழங்கிய சலுகைகளை இலங்கை கிரிக்கெட் சபை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினிறது.

இதன்படி கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுடன் செல்லும் மனைவி, பிள்ளைகளுக்கும் இலவச விமான டிக்கெட்டுக்கள் போன்ற சலுகைகள் முன்னதாக வழங்கப்பட்டிருந்தது.தற்போது இந்த சலுகைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவர்களின் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆசிய பயணங்களை மேற்கொள்ளும் போது மாத்திரம் வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் குடும்பங்களுக்கு இலவச விமான டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

326730-sri-lanka-cricket-board-log

Related posts: