இனிவரும் O/L பரீட்சைக்கு 06 பாடங்கள்!

Monday, October 8th, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போது இருக்கின்ற 09 பாடங்களை 06 பாடங்களாக குறைப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையின் எதிர்காலத்திற்காக நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு மாற்றங்கள் மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலி மீபாவல அமரசூரிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: