இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்து!

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
பல மேற்கத்திய நாடுகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உட்பட 23 நாடுகள் மட்டுமே பாடசாலை மூடியுள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் இதனை தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மளவிகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும்போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முதலில் பாடசாலைகளை அரம்பிக்க திட்டமிடப்பட்டள்ளது.
அத்துடன் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறைந்தளவிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரம் தொடர்பிலான மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள 15 நாடுகளில் ஒரு நாடாக இலங்கை உள்ளதென தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பாடசாலைகளை உடனடியாக திறந்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு பெற்றோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கினால் பாடசாலைகளை திறப்பதற்கு தயா் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பதாக இன்று காலை சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|