இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம் – ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்ட வகையிலும், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்தரப்பினரின் ஆதரவுடன் இயங்கும் குழுவே இந்த வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களை பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாது போயின், இராணுவத்தை களமிறக்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|