இனவாதத்தை தூண்டுபவர்களை கைது செய்ய ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் இனவாதத்தை தூண்டும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இனவாதத்தை தூண்டுவோர் எந்த இனத்தவர் என பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் சபை கூட்டத்தின் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிதாக வரையப்பட்டு வரும் அரசியலமைப்பில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் வரை இனங்களுக்கு இடையில் அமைதியை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய, குறைந்தது ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த அனைத்துவகையான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் இனவாதத்தை தூண்டுபவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் விலயுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|