இனரீதியான தேவைகளை வரையறை செய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும் – ஐ.நா!

இலங்கையில் வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வெறுப்புணர்வு மற்றும் இனவெறி மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட கருத்துக்கள், இனவெறுப்பை தூண்டுதல், இன மற்றும் நிற அடிப்படையில் மற்றுமொரு நபரை அல்லது குழுவினருக்கு எதிரான வன்முறை, அவ்வாறான வன்முறைகளை தூண்டுதல் போன்றவற்றுக்கு தடைவிதிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூழ்நிலைகள் மோசமடைந்துவரும் நிலையில் இனரீதியான நோக்கங்களை வரையறை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இன ரீதியான பாரபட்சத்தை ஒழிக்கும் ஐக்கிய நாடுகளின் குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை தொடர்பிலான மீளாய்வு மற்றும் இலங்கை பிரதிநிதிகள் முன்வைத்த அறிக்கைகளை கருத்தில் கொண்டு ஐ.நா குழு இந்த பரிந்துரைகளை செய்துள்ளது.
Related posts:
|
|