இனப் பிரச்னைக்கு தீர்வு தொடர்பில் 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை – ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை!

Saturday, December 3rd, 2022

இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 வாக்குகளையும் தக்கவைப்பதற்கும் அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இனப் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு வருமாறு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டுவதற்கு திட்டம் உள்ளதாக கடந்த நவம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தார்..

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான முதலாவது கூட்டம் வரும் 12ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

இதேவேளை வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு என தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தி – அடியோடு நி...