இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்:  யாழில் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தல்

Tuesday, May 3rd, 2016

இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும் . விசேடமாக இனப் பிரச்சினைக்குத் தமிழ மக்கள் ஏற்கக் கூடிய தீர்வினை வழங்க வேண்டுமென மேதினத்தில் வலியுறுத்துகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01-05-2016) கல்விச் சமூகத்தல ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மேதின நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கல்விக்கு  6  வீதம் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். கல்வித் துறையில் களவாக அரசியல் நியமனங்கள் வழங்குகிறார்கள். அந்த நியமனங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தினை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனைத் தடுக்க வேண்டும்.

கல்வியில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெறுகின்றன. அவற்றினை உடன் நிறுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: