இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வே நல்லிணக்கத்திற்க வழிகோலும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Thursday, February 16th, 2017

இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணுவதூடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்ற அடிப்படையின் கீழ் நாம் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,உடனிருந்தனர்.

தேசிய நல்லிணக்கம் என்பது வெறும் வாய்ப்பேச்சு அளவில் நின்று விடாது அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமாயின் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில்தான் நாம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது ஏனைய துறை சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது கட்சியின் அரசியல் நிலைப்பாடு, கொள்கை, வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலமாக தென்னிலங்கை அரசியல் தலைமைகள் மட்டுமல்லாது ஏனையவர்களும் எமது கட்சி தலைமை தொடர்பாக அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் கொண்டுள்ள அதேவேளை சக தமிழ் கட்சிகட்சிகளை பார்க்கிலும் எமது கட்சி கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக தெளிவடைந்து வருவதையும் எங்களால் உணர முடிகிறது.

இதன் காரணமாகத்தான் பெரும்பான்மையின மக்களும் தமிழ் பேசும் மக்களும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கை மற்றும் கட்சியின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்றுதான் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எமது கட்சியின் நிலைப்பாடு வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வட்டார ரீதியாக சமகால அரசியல் விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் கலந்துரையாடலின் ஊடாக தெளிவுபடுத்தி வருகின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,உடனிருந்தனர்.

b

Related posts: