இந்நாட்டு பிரஜை எவரும் ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை – இரகசிய வாக்குமூலத்தில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Saturday, April 27th, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில், இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு பிரஜையோ ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை என தெரிவித்ததாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (26) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் சில உண்மைகளை வெளியிட முடியாது எனவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: