இந்த வருடத்தில் தோன்றும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள்!

Friday, January 18th, 2019

இந்த வருடத்தில் 03 சூரிய கிரகணங்களும் 02 சந்திர கிரகணங்களும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6 ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.

அத்துடன் மே மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜூலை மாதம் 16 ஆம் திகதி உருவாகும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கையர்களால் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: