இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!

Saturday, March 18th, 2023

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்தில் மோதி மற்றும் தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 57 ஆக உயர்ந்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்தை விட அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் தொடரூந்துடன் தொடர்புடைய உயிரிழப்புகள் 175 என்பதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆகும் என தொடரூந்து திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார்.

நாட்டில், தொடரூந்து கடவைகளில் பொருத்தப்பட்டுள்ள பெல் என்ட் லயிட் முறைமை மூலம் வழங்கப்பட்டுள்ள சமிஞ்சை மூலம் விபத்துக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தொடருந்து கடவைகளை கடக்கும் போது, அவதானமாக செயற்படுமாறு தொடரூந்து திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: