இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்..

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

இது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: