இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

Sunday, January 9th, 2022

இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இது தொடர்பான ஒப்புதலை ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த மாத இறுதியில் பரீட்சாத்த திட்டமாக மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டையின் மூலம் கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: