இந்த மாத இறுதிக்குள் இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!

Tuesday, September 20th, 2016

இலங்கை கிரிக்கெற் அணி வீரர்களின் ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது வரை காலமும் இழுபறியில் இருந்து வந்த நிலையில், அதற்போது அதற்கான தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகார ஆஷ்லி டி சில்வா தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது விளையாடிய வீரர்களுக்கு அந்த போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் மாத்திரம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கை அணி அடுத்த மாத நடுப்பகுதியில் சிம்பாவேக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள முன்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒப்பந்தம், வீரர்களின் ஒப்பந்த பட்டியல் எண்ணிக்கையை 20 ஆக குறைப்பது, வீரர்களுக்கான கொடுப்பனவை தகமை வெளிப்பாட்டின் அடிப்படையில் மேலதிக ஊக்குவிப்பு தொகையாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இதுவரை கைச்சாத்தாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

colsri-lankan-cricket-team-720x480194648975_4782086_19092016_aff_cmy

Related posts: