இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 28th, 2021

டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விமான சேவைகள் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுவிஸ் ஓய்வு பயண விமான நிறுவனமான எடல்வீஸ் (Edelweiss) நவம்பர் மாதம்முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனமும் நவம்பரில் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எயார் பிரான்ஸ் நவம்பரில் இருந்து இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் அதேவேளை, ரஷ்யா மற்றும் இத்தாலியில் இருந்து இயங்கும் இரண்டு விமானங்கள் டிசம்பரில் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேநேரம், பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விளம்பரங்களை மேற்கொள்ளுமாறு இந்த வார தொடக்கத்தில் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விளம்பரங்களை துரிதப்படுத்துமாறும் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: