இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!

Wednesday, March 6th, 2019

இவ்வாண்டுக்கான பாதீட்டின் முதல்வாசிப்பு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில், நல்லிணக்க முயற்சிகளானது மிகவும் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வகையில் அமையும் நோக்கில், பிரதமரின் கீழ் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தின் மூலம் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், நட்டஈட்டு அலுவலக சட்டமூலமானது ஏற்கனவே நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயற்பாடுகள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

அதற்கு அவசியமான ஆளணி மற்றும் உரிய வளங்கள் போதுமானளவு பாதீட்டின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, காணாமல் போனோரது உறவினர்களுள், காணாமல் போனவர்களுக்கான’பிரசன்னமில்லாதோர்’ சான்றிதழ் கொண்டவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த கொடுப்பனவானது நட்டயீட்டு அலுவலகம் உருவாக்கப்படும் வரையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் ரூபா 5,000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக ‘பனை நிதியம்’ உருவாக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 15 ஆயிரம் செங்கல் மற்றும் சாந்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக 5500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் உற்பத்தி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, வர்த்தக மற்றும் வரிசார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விசேட தேவை உடைய 72 பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவாக வழங்குவதற்காக 4300 மில்லியன் ரூபாய் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்னெடுக்கும் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் பங்காளியாக மாத்திரமே பங்கெடுக்க முடியும்.

எனினும், குறித்த கட்டுமான வேலைத்திட்டம் முழுமையாக வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கான அனுமதி வழங்கப்படும்.

சுற்றுலாத்துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வெளிநாட்டு நாணய பெறுகையின் போது பதிவு செய்யப்பட்ட ஹொட்டல்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நீக்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான, தேசிய பூங்கா அனுமதி சீட்டுக்களின் விலை 50 சதவீதம் குறைக்கப்படும்.

நிதி அமைச்சில் வருமான புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

அதேநேரம், இந்த ஆண்டுக்குள் இலங்கையில் மலசல கூடம் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலைமையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொது இடங்களிலும் வீடுகளிலும் மலசலக் கூடங்களை அமைப்பதற்காக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

பேருந்து நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் அமைக்கப்படவுள்ள ஆண் பெண் மற்றும் விசேட தேவை உடையோருக்கான மலசல கூடங்களை நடத்தி செல்வதற்கு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் வழங்குவதற்கும் புதிய பாதீட்டின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை சனத்தொகையில் 30 சதவீதமான பெண்களே தொழிற்படையினரால் உள்ளனர். இந்த நிலையில் பெண்களது தொழிற்படையை அதிகரிக்க விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பெண்கள் வீட்டில் இருந்து தொழில்புரியும் வகையிலும், அதிக நெகழ்வுத்தன்மையைக் கொண்டதாகவும் தொழிற்சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேசாலை மற்றும் மண்டைத்தீவு ஆகிய இடங்களில் இரண்டு புதிய மீன்பிடி துறைமுகங்களை நிர்மாணிப்பதற்காக ஒரு லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் அரசாங்க புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுவர்.

மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பதை ஊக்குவிப்பதற்காக 1.1 மில்லியன் இலகுக்கடன் வழங்கும் திட்டத்துக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுவதுடன், 2 ஆண்டு சலுகை காலவும் வழங்கப்படவுள்ளது.இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூலம் ஆசிரியர் பயிற்சிக்காக, அரச மொழிகள் அமைச்சுக்கு 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பழைய நகர மண்ட மறுசீரமைப்பதற்காக 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பை ஆசியாவின் பூங்காவாக மாற்றுவதற்கான வேலைத்திட்ம் ஆரம்பிக்கப்படுவதுடன், மர வளர்ப்புக்காக 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

அரச பணியாளர்களுக்கு ஜுலை முதலாம் திகதி முதல் 2500 ரூபாய் வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழுவை சக்திமயப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக 6 லட்சம் சமுர்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேநேரம். சிகரட்டுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டு, அதன் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதனால், ஒவ்வொரு தனிக்கூருக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கும்.

2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும்.

பீடி இலைகளின் இறக்குமதி மீதான உற்பத்தித் தீர்வை கிலோ கிராம் ஒன்றுக்கு 2,500 இலிருந்து 3,500 ரூபாவாக 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும்.

ஆளொருவருக்கான புறப்படுகைக் கட்டணம் 10 அமெரிக்க டொலரினால் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதிகரிக்கப்படுகின்ற புறப்படுகைக் கட்டணம் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

ஏதேனும் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுப்பனவுகள் மீதான தற்பொழுது காணப்படும் முத்திரை தீர்வைக்குப் பதிலாக 3.5 சதவீத தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும்.இது 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும்.

கடவுச் சீட்டு தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, கடவுச் சீட்டு திருத்தத்திற்கான கட்டணம் 500 ரூபாவில் இருந்து 1,000 ரூபாவாகவும், ஒரு நாள் கடவுச் சீட்டு பெறுகை சேவை 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாவாகவும், சாதரண சேவை 3,000 ரூபாவில் இருந்து 3,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக பாதீட்டு முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மோட்டார் வாகனத்துக்கான பெயருடன் கூடிய தனிப்பட விசேட இலக்கத் தகடுகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கசினோவிற்கான வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணம் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் ஜுன் 1ம் திகதி முதல் கெசீனோவிற்கான நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதேநேரம், நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனங்களது உற்பத்தி வரி மற்றும் சொகுசு வாகன வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி 800 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1000 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒருலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன் 1300 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

அதேநேரம், 800 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1500 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.2019ம் ஆண்டுக்கான பாதீட்டின் முதல்வாசிப்பு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில், நல்லிணக்க முயற்சிகளானது மிகவும் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வகையில் அமையும் நோக்கில், பிரதமரின் கீழ் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தின் மூலம் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், நட்டஈட்டு அலுவலக சட்டமூலமானது ஏற்கனவே நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயற்பாடுகள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

அதற்கு அவசியமான ஆளணி மற்றும் உரிய வளங்கள் போதுமானளவு பாதீட்டின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, காணாமல் போனோரது உறவினர்களுள், காணாமல் போனவர்களுக்கான ‘பிரசன்னமில்லாதோர்’ சான்றிதழ் கொண்டவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த கொடுப்பனவானது நட்டயீட்டு அலுவலகம் உருவாக்கப்படும் வரையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் ரூபா 5,000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக ‘பனை நிதியம்’ உருவாக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 15 ஆயிரம் செங்கல் மற்றும் சாந்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக 5500  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் உற்பத்தி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, வர்த்தக மற்றும் வரிசார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விசேட தேவை உடைய 72 பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவாக வழங்குவதற்காக 4300 மில்லியன் ரூபாய் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்னெடுக்கும் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் பங்காளியாக மாத்திரமே பங்கெடுக்க முடியும்.

எனினும், குறித்த கட்டுமான வேலைத்திட்டம் முழுமையாக வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கான அனுமதி வழங்கப்படும்.

சுற்றுலாத்துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வெளிநாட்டு நாணய பெறுகையின் போது பதிவு செய்யப்பட்ட ஹொட்டல்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நீக்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான, தேசிய பூங்கா அனுமதி சீட்டுக்களின் விலை 50 சதவீதம் குறைக்கப்படும்.

நிதி அமைச்சில் வருமான புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

அதேநேரம், இந்த ஆண்டுக்குள் இலங்கையில் மலசல கூடம் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலைமையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொது இடங்களிலும் வீடுகளிலும் மலசலக் கூடங்களை அமைப்பதற்காக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

பேருந்து நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் அமைக்கப்படவுள்ள ஆண் பெண் மற்றும் விசேட தேவை உடையோருக்கான மலசல கூடங்களை நடத்தி செல்வதற்கு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் வழங்குவதற்கும் புதிய பாதீட்டின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை சனத்தொகையில் 30 சதவீதமான பெண்களே தொழிற்படையினரால் உள்ளனர்.

இந்த நிலையில் பெண்களது தொழிற்படையை அதிகரிக்க விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பெண்கள் வீட்டில் இருந்து தொழில்புரியும் வகையிலும், அதிக நெகழ்வுத்தன்மையைக் கொண்டதாகவும் தொழிற்சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேசாலை மற்றும் மண்டைத்தீவு ஆகிய இடங்களில் இரண்டு புதிய மீன்பிடி துறைமுகங்களை நிர்மாணிப்பதற்காக ஒரு லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் அரசாங்க புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுவர்.

மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பதை ஊக்குவிப்பதற்காக 1.1 மில்லியன் இலகுக்கடன் வழங்கும் திட்டத்துக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுவதுடன், 2 ஆண்டு சலுகை காலவும் வழங்கப்படவுள்ளது.

இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூலம் ஆசிரியர் பயிற்சிக்காக, அரச மொழிகள் அமைச்சுக்கு 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பழைய நகர மண்ட மறுசீரமைப்பதற்காக 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பை ஆசியாவின் பூங்காவாக மாற்றுவதற்கான வேலைத்திட்ம் ஆரம்பிக்கப்படுவதுடன், மர வளர்ப்புக்காக 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

அரச பணியாளர்களுக்கு ஜுலை முதலாம் திகதி முதல் 2500 ரூபாய் வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழுவை சக்திமயப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதியதாக 6 லட்சம் சமுர்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேநேரம். சிகரட்டுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டு, அதன் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதனால், ஒவ்வொரு தனிக்கூருக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கும்.

2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும்.

பீடி இலைகளின் இறக்குமதி மீதான உற்பத்தித் தீர்வை கிலோ கிராம் ஒன்றுக்கு 2,500 இலிருந்து 3,500 ரூபாவாக 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும்.

ஆளொருவருக்கான புறப்படுகைக் கட்டணம் 10 அமெரிக்க டொலரினால் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதிகரிக்கப்படுகின்ற புறப்படுகைக் கட்டணம் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

ஏதேனும் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுப்பனவுகள் மீதான தற்பொழுது காணப்படும் முத்திரை தீர்வைக்குப் பதிலாக 3.5 சதவீத தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும்.

இது 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும்.

கடவுச் சீட்டு தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, கடவுச் சீட்டு திருத்தத்திற்கான கட்டணம் 500 ரூபாவில் இருந்து 1,000 ரூபாவாகவும், ஒரு நாள் கடவுச் சீட்டு பெறுகை சேவை 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாவாகவும், சாதரண சேவை 3,000 ரூபாவில் இருந்து 3,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக பாதீட்டு முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மோட்டார் வாகனத்துக்கான பெயருடன் கூடிய தனிப்பட விசேட இலக்கத் தகடுகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கசினோவிற்கான வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணம் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் ஜுன் 1ம் திகதி முதல் கெசீனோவிற்கான நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதேநேரம், நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனங்களது உற்பத்தி வரி மற்றும் சொகுசு வாகன வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி 800 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1000 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒருலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன் 1300 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

அதேநேரம், 800 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1500 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

Related posts: