இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றம்! அரசாங்கம் அறிவிப்பு!

Monday, June 6th, 2016

யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்,

யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

இதில் தமிழ், சிங்களம், முஸ்லீம் மக்களும் அடங்குகின்றனர். இந்நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: