இந்தோனேஷிய ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பேச்சு!

இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இன்று ஈடுபட்டார்.
இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜகார்த்தா நகரின் மர்டேகா மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக, அரசியல் மற்றும் மத ரீதியான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய சவால்களுக்கு ஏதுவான மேலும் பலம்வாய்ந்த உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என இந்தோனேஷிய ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
G7 மாநாட்டிற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில், இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.அதன் பிரகாரம், இலங்கை ஜனாதிபதியின் வருகைக்காகக் காத்திருப்பதாக இந்தோனேஷிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையில் ஒன்றிணைந்த வர்த்தக மாநாடொன்றை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தோனேஷியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்தோனேஷிய நிதி அமைச்சர் ஸ்ரீ முலயானி இந்திரவதியையும் சந்தித்தனர்.
Related posts:
|
|