இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Tuesday, December 14th, 2021

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

GMT நேரப்படி 03. 20 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் Maumere நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்  கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இந்தோனேசியாவில் 2004 ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது. இதன்போது ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி இந்தோனேசியாவில் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: