இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் பாரிய நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு!
Saturday, November 19th, 2022இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு:ளது
இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8 ரிச்டர் நிலநடுக்கத்தினால் இலங்கை கரையோர பிரதேசங்களிற்கு எதுவித பாதிப்பும் இல்லை.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலகத்திற்கும் அறிவுறுத்தல் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பஸ் - லொறி - கார் விபத்தில் - 13 பேர் வைத்தியசாலையில்
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!
எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!
|
|