இந்து சமுத்திர நிர்வாக சட்ட கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும் – பிரதமர்!
Saturday, September 3rd, 2016இந்து சமுத்திர நிர்வாக சட்ட கட்டமைப்பு ஒன்றை உரவாக்குவதற்கான அடித்தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..
இந்து சமுத்திர கட்டுப்பாட்டு சட்ட கட்டமைப்பு அரசுகளுக்கு இடையிலான சர்வதேச செயற்பாடுகளை வழிநடத்துவதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் பிராந்திய கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம்ம் இரவு ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 21 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 250 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்!
வடக்கில் அரசியல் மயமாக்கப்படும் கல்விக் கட்டமைப்பு - ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ஆசிரியர...
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி !
|
|