இந்து ஆலயங்களின் பாதுகாப்பில் கவனம் – பன்னாட்டு இந்து குருமார் ஒன்றியம் அறிவித்தல்!

Sunday, May 12th, 2019

நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கவனம் எடுக்க வேண்டும். ஆலயத்துக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆலய நிர்வாகங்கள் செயற்பட வேண்டும் என்று பன்னாட்டு இந்து மத குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த ஒன்றியம் இவ்வாறு கோரிக்கை விடுத்தது. ஒன்றியத்தின் தலைவர் ஐயப்பதாச சுவாமிகள் மற்றும் ஒன்றியத்தின் யாழ்ப்பாணத்துக்கான தலைவர் ஜெகதீஸ்வர சர்மா, நல்லை ஆதீனக்குரு முதல்வர் ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அங்கு தெரிவிக்கப்பட்டதாவது:

தற்போது ஆலயங்களின் திருவிழாக்காலங்கள் ஆரம்பமாகியுள்ளன. திருவிழாக்களின் போது நாட்டின் தற்போதைய நிலைமையைக்கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமையால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது. ஆலய நிர்வாகத்தினர் திருவிழாக்களை நேர காலத்துடன் நடத்தி முடிக்க வேண்டும். ஆலயத்துக்கு வரும் மக்களின் பாதுகாப்பு முக்கியமானது. அதைக் கருத்தில் கொண்டு செயற்படுதல் அவசியம்.

Related posts: