இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷச இடையே விசேட கலந்துரையாடல்!
Saturday, January 21st, 2023இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது
அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, நெருக்கடியான காலங்களில் ஒரு நாடாக இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா வழங்கி ஆதரவைப் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!
நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!
தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்!
|
|