இந்திய வெளிவிவகார அமைச்சர் – வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பு – இருதரப்பு பொருளாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு!

அபுதாபியில் நடைபெற்ற 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துரையாடினர்.
பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான முன்முயற்சிகள் மற்றும் பிராந்திய நிறுவனங்களில் கூட்டு முயற்சிகள் ஆகியன தொடர்பில் இதன்போது குறிப்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!
தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு!
|
|