இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் தலைமையில் ஐவரடங்கிய குழுவினர் யாழ்.விஜயம்!

Thursday, January 5th, 2017

இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் சஞ்சை பண்டா தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் கடந்த புதனன்று (04) யாழ். குடாநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வலி.வடக்குப்  பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறிய மக்களின் வீடமைப்புத்திட்டங்களைப்  பார்வையிட்ட குறித்த குழுவினர்  நவீனப்படுத்தப்பட்டுள்ள  யாழ்.துரையப்பா விளைட்டரங்கு, இந்திய கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றினை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் 2017 ஆம் ஆண்டில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் தொடர்பான  மதிப்பீடுகளையும் குறித்த குழுவினர் மேற்கொண்டனர்.

unnamed (1)

unnamed (2)

Related posts: